திங்கள், 26 ஜனவரி, 2015

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுப் பாடல்…

ஆடுவெட்டி பொங்க வைக்கும்
அண்ணே... அண்ணே...
ஒரு சிங்கம் வெட்ட நேந்துகிட்டா
தப்பா என்ன...?
பூ மிதிக்கப் போறவளே
பொண்ணே... பொண்ணே...
அதுல உருண்டு போக வேண்டிகிட்டா
தப்பா என்ன...?

(ஆடுவெட்டி
                                               
நாக்குலதான் அலகு குத்த
வேண்டாதண்ணே...
உன் கண்ணுக்குள்ள குத்தறேன்னு
வேண்டிக்கண்ணே...
பூச்சட்டித் தூக்கறதா
வேண்டும் பொண்ணே...
பழுக்கக் காய்ச்சி வெச்ச இரும்ப நீயும்
தூக்கு பொண்ணே...

(ஆடுவெட்டி



காணிக்கையா முடிதருவேன்னு
வேண்டாதண்ணே... - ஒரு
காதறுத்துத் தார்றேன்னு
வேண்டிக்கண்ணே....
தலைமேலதான் தேங்காயுடைக்க
வேண்டும் பொண்ணே...
உன் மூக்கு மேல போட்டுடைக்க
வேண்டு பொண்ணே...

(ஆடுவெட்டி

முள்ளு செருப்புப் போட்டு
பக்திகாட்டும் அண்ணே...
ஒத்த ஊசிமேல நின்னு நீயும்
வேண்டிக்கண்ணே...
சூடமேத்தி கையில் வைக்கும்
பொண்ணே... பொண்ணே...
பாயும் மின்சாரத்த புடுச்சுகிட்டா
தப்பா என்ன...?


(ஆடுவெட்டி