ஞாயிறு, 23 டிசம்பர், 2018

என் இனத்திற்கு எதிராக எது வந்தாலும் எதிர்த்து போராடுவேன் -

                                      செந்தமிழன் சீமான் 
                           
                                                                                                 
 நேர்முகம் - சகா.சசிக்குமார்

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இன அழித்தொழிப்பை செய்துவரும் சிங்கள, இந்திய அரசுகளைக் கண்டித்து மேடைகளில் முழங்கியமைக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் இரண்டுமுறை கைது செய்யப்பட்டவர் இயக்குனர் சீமான். சமீபகாலமாக இளைஞர்களிடமும்,  த மி ழி ன உணர்வாளர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். எப்பொழுதும், யாரிடமும் பகுத்தறிவு, இன உணர்வு, புரட்சிகர சிந்தனைகள் என பேசி வருவதோடு, கொண்ட கொள்கைக்காக வாழ்ந்து வருகிறார். கடந்த நாடளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கூட்டணியை எதிர்த்து மேற்கொண்ட பரப்புரை தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைத்து “நாம் தமிழர்” என்ற இயக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் பணியில் இருந்த அவரிடம் நாம் கண்ட சிறப்பு நேர்முகம்.

கேள்வி : “நாம் தமிழர்” என்கிற புதிய இயக்கம் எதற்காக?
நடந்து முடிந்த ஈழத்தமிழர் படுகொலையில் ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் அழித்தொழிப்பது என்று ஒன்னரைக் கோடி சிங்களனும் ஒற்றுமையா செயல்பட்டான். ஆனால், தாயகத் தமிழனோ ஜாதி, மத, கட்சி என பிளவு பட்டிருந்தான் ஒரு நாளும் தமிழனாக இல்லை. அதனால்தான் ஈழத்தில் மொத்த இனமும் செத்து விழுவதை பார்த்து உணர்வுள்ளவன் கதறினான், துடிச்சான் அவனால் இயலாமல் போனது. மிச்சமிருக்கிற தமிழன்  எனக்கென்ன என்று தான் தோன்றித்தானமா போளிணி விட்டான். ஆறரைக் கோடித் தமிழர்களில், அரைக் கோடித் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராடி இருந்தால் கூட அங்கு ஒவ்வொரு உயிரையும் சாகாமல் தடுத்திருக்கலாம். ஒரு தேசிய இனம் தன் விடுதலைக்கான போராட்டத் தில் அந்த இனத்து மக்களே பங்கெடுக்காத அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றனும் என்கிற எண்ணத்தோடு, நானும் தமிழன், நீயும் தமிழன் அதனால் நாம் ஒன்றினைந்து நமக்கான தேவை களை வென்றெடுப்போம் வாருங்கள் உறவுகளே என்று தொடங்கியது தான் இந்த “நாம் தமிழர்” இயக்கம். 

கேள்வி : முற்போக்கு இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள் இதைத்தானே சொல்லி செயல்படுகிறார்கள். இதில் புதிய இயக்கம் தேவைப்படுகிறதா?
முற்போக்கு இயக்கங்கள் தமிழ் தேசிய இயக்கங்கள் என்பவையெல்லாம், பேரியக்கமாக இல்லை. பொதுத்தலைமையில் அரசியலை நிராகரிச்சு, தேர்தலை புறக்கணிக்கற இயக்கங்களாக இருக்கு. அவையெல்லாம் சிறு சிறு குழுக்களா இருப்பதாகத்தான் எனக்கு தெரிகிறது. தமிழர்களை ஒன்றிணைப்பதை விட்டுவிட்டு தமிழ் தேசிய சக்திகள் பிளந்துக் கிடப்பதை பார்க்கிற போது அது நம் இனத்துக்கு பெரும் பின்னடைவைத் தருகிறது. அதனால் தான் நாம் தமிழர்களாக இணைந்து பேரியக்கமாக உருவாக்கிக் கொள்வது என்கிற தேவை ஏற்படுகிறது. 

கேள்வி : ஏற்கனவே பல்வேறு ஜாதியாவும், மதமாகவும் பிரிந்து கிடப்பதோடு பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கும் மக்கள் புதிய இயக்கத்தில் இணைவார்கள் என்பது எப்படி சாத்தியம்?
எனக்கென்று ஜாதி, மதம், நான் சார்ந்த கட்சி என்றிருந்ததையெல்லாம் தாண்டி என் இனம் என்று நான் வந்து நிற்கிற மாதிரி லட்சோப லட்ச தம்பிமார்கள், என் உறவுகள் இருக்கிறார்கள். எங்களுக்கு அப்பழுகற்ற தியாகமும், அர்ப்பணிப்பும், சுயநலமற்ற மண்ணின், மக்களின் நலமும் முதன்மையா இருப்பதனால் இந்த மக்கள் எங்களை நம்பி வருவார்கள் என்கிற அசாத்திய நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அதனால் இது வழக்கமான அரசியல் இயக்கமாக இல்லாமல் என் இனத்திற்கான அரசியலை செய்கிற ராணுவ கட்டமைப்பு கொண்ட இயக்கமாக மாறப்போகிறது. அவ்வளவு உறுதியோடும், நேர்மையான நிலைப் பாட்டோடும் இந்த மண்ணில் நிற்போம்.

கேள்வி : “இலவசம்” என்கிற அரசியல் நடந்து கொண்டிருக்கிற சூழலில் அர்ப்பணிப்பு, தியாகம், நேர்மை இதெல்லாம் மக்களிடம் எடுபடுமா?
பணமும், இலவசமும் கொடுத்து ஓட்டு வாங்கி விடுகிறார்கள் என்கிற விமர்சனம் பெருவாரியாக எம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த விமர்சனம் இழிவான இந்த அரசியலை ஒரு நாள் வீழ்த்தும். வீழ்த்துகிற மனநிலையில் தான் இப்பொழுது மக்கள் இருக்கிறார்கள். அந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனால் “இலவச” அரசியலை வீழ்த்துவது எளிது.

கேள்வி : ஒரு பெரிய அரசியல் கட்சியின் து£ண்டுதலின் காரணமாகத்தான் நீங்கள் இயக்கம் ஆரம்பித்தாகவும் அதன் மூலம் உங்களை முடக்கி விடலாம் என்கிறார்களே?
உலகத்தில் எந்த அரசியல் கட்சியாவது இன்னொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க து£ண்டும் என்று யாராவது சொன்னால் அது. வேடிக்கை யாகத்தான் இருக்கும். உலகத்தில் யாராலும் என்னை அடக்கமுடியாது. நான் என் தலைவன் பிரபாகரன் பேச்சை மட்டும்தான் கேட்டேன். இனியும் அவர் சொல்படி தான் செயல் படுவேன். தமிழ்நாட்டில் என் அண்ணன் “கொளத்து£ர் மணி” சொல்வதைத்தான் கேட்பேன். மற்றபடி எனக்கும் சுய சிந்தனை உண்டு நானாக சிந்தித்து முடிவெடுப்பேன். பிரபாகரன் வழியில் இந்த மண்ணுக்காவும், மக்களுக்காவும் சாவதற்கு அவர் தம்பி நான் நிற்கிறேன். இதில் யாரும் என்னை விலை கொடுத்து வாங்குவதோ, அவர்கள் சொல்வதை செய்வதற்கோ நானில்லை.

கேள்வி : பாரதிராஜா, சீமான் போன்றவர்கள் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக் கொண்டு தேர்தல் பரப்புரை செளிணிததாக கருத்து பரப்பப்பட்டதே?
அந்தப்பக்கம் பெட்டி வாங்கிக் கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், நாங்களும் பெட்டி வாங்கியிருப்பமோ என்று நினைத்துக் கொண்டு சொல்லியதுதான் அது. பெரியாரின் பேரன் பிரபாகரனின் தம்பி கொள்கைக்காக சாவானே தவிர இந்த நத்தித்தானப் பிழைப்பு கிடையாது. நான் திரைப்படம் எடுத்தால், நடித்தால் பணம் வரும். இது சும்மா கிளப்பிவிடுகிற வதந்திதான். 

கேள்வி : பின் எதற்காக அ.தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் செளிணிதீர்கள்?
சிங்கள ராணுவத்திற்கு துணையாக என் இன அழிப்புப் போரை பின்னின்று நடத்தியதே இந்திய அரசு. இந்திய அரசுன்னா அன்றைக்கு ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசு, அதன் தலைமை. இந்த கொடுமையை நிகழ்த்தியது சோனியா காந்தியும் அவரது பிள்ளைகளான பிரியங்கா, ராகுல் காந்திதான். அதற்கு துணை போன மலையாள அதிகாரிகளான சிவசங்கர் மேனன், எம்.கே. நாராயணன், விஜய் நம்பியார், சதீஸ் நம்பியார், கோபிநாத் தச்சன்குளங்கரை மற்றும் ஏ.கே. அந்தோணி போன்றோர்கள் பின் நின்று நடத்திதான் இந்த அழிப்பை செளிணிதார்கள். அதனால் நாங்கள் குறைந்தபட்சம் தேர்தலிலாவது காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் கடைசி வரை இன நலனைப் பற்றி கவலைப்படாமல் காங்கரஸோடு கரம் குலுக்கி நின்றது. அப்பொழுது அ.தி.மு.க. காங்கிரஸை எதிர்த்து பதினோரு தொகுதியில் நின்றது. அதனால், இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டாத்தான் காங்கிரஸை வீழ்த்த முடியும். யாருக்கு வேணா போடுங்கன்னு குடுகுடுப் குப்பைக்காரன் மாதிரி உளறிவிட்டு போக முடியாது. இதனால், அடுத்த தேர்தலிலும் அ.தி.மு.கவை ஆதாரித்து பேசிட்டு இருப்போம் என்று நினைக்கக் கூடாது. இது வெட்டிப் பயல்களின் வெறும் பேச்சு. 

கேள்வி : நீ ங் க ள் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் மூலம் கி ¬ ட த் த பயன் என்ன?
மத்தியிலும், மாநிலத்திலும் இரண்டு கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்படியிருந்தும் காங்கிரஸ் ஏழுத் தொகுதியில் வீழ்ந்தது. தங்கபாலு, இளங்கோவன், மணி சங்கர் (அய்யர்), சாருபலா தொண்டைமான் வீழ்ந்தத்தற்கு எங்களுடைய உழைப்பு பெரும் பங்கு அளித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கேள்வி : ஈழத்தமிழர்களுக்காக தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா உண்ணா நிலைப் போராட்டம் நடத்தி “தமிழீழம்” தான் தீர்வு என்றெதெல்லாம் உணர்வாளர்களை ஏமாற்ற நடந்த நாடகம் என்கிறார்களே?
ஜெயலலிதா தமிழீழத்தை வென்று கொடுப்பார் என்று தமிழின உணர்வாளர்கள் யாரும் அவருக்கு பின்னால் போய் நிற்கவில்லை. நாங்கள் ஏற்கனவே காங்கிரஸை எதிர்ப்பது என்று முடிவு செய்துவிட்டோம். அந்த நேரத்தில் அவரும் தமிழீழத்தை தவிர வேறு தீர்வில்லை என்று சொன்னார். தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெரிய கட்சி இப்படி சொன்னது, எங்களுக்கு பிடிச்சிருந்தது. ஏனென்றால், தி.மு.க அந்த நிலைப்பாட்டில்  இல்லை. ஆனால், தமிழீழத்தை ஆதரிக்கிற பா.ம.க. ம.தி.மு.க மற்றும் ஓரளவு ஆதரவு நிலையில் இருக்கிற இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை அ.தி.மு.க அணியில் இருந்தன. அதனால் அந்த தலைமையை வரவேற்கிறோம் என்று பேச வேண்டியிருந்தது. 

கேள்வி : சினிமாவில் சீமானுக்கு வாய்ப்பில்லை, இடம் காலியாகி விட்டது. அதனால் தான் இயக்கம், அரசியல் என்று போய்விட்டார் என்கிற பேச்சு அடிபடுகிறதே?
இடம் காலியாகிவிட்டது அதனால் போய்விட்டார் என்பதை அக்கறையில் சொல்கிறீர்களா? அல்லது விமர்சனமா சொல்கிறீர்களா? இதென்ன கணக்கு. வாழ்த்துகள் படத்தை வெளியிட்டு விட்டுதான் என்  தலைவனை சந்தித்தேன். அப்படி சந்தித்த நாளில் இருந்து அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு நம் விடுதலை உணர்வை கொண்டு போக வேண்டும் என்று எனக்கு கட்டளையிட்டார். அந்த பணியை செய்து கொண்டிருந்தேன். “மாயாண்டி குடும்பத்தார்” படம் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் கைது பண்ணிட்டு போனீங்க. திருப்பி நடிச்சுக் கொடுத்தேன் படம் ஒடுது. மறுபடியும் நடிப்பேன், இயக்குவேன். இது என்னுடைய தனிப்பட்ட வருமானம் பாதிக்கக் கூடிய விசயம். ஆனால், என் இனமானத்தை காப்பாற்ற திரையுலகில் இருந்து எவனும் வரவில்லை என்று பேசுவீங்களா, அதை விட்டு இடம் காலியாகி விட்டது என்றால் அதென்ன உங்க அப்பன் வீட்டு இடமா காலி பண்ணிட்டு போறதுக்கு? இதுமாதிரி விமர்சனம் செளிணிகிற நாளிணிகளால்தான் என் இனம் வீழுது. நான் மறுபடியும் படம் எடுக்கிறேன் பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்வி : ஈழம் வீழ்ந்ததற்கு சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தான் காரணம் இந்தியா இல்லை என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்களே?
சீனா தான் செய்தது, பாகிஸ்தான் தான் செய்தது என்று எவனாவது பைத்தியகாரன் இருப்பான் அவனிடம் சொல்லுங்க. “சோனியாவும், மன்மோகன் சிங்கும் என்ன நினைத்தார்களோ அதை செய்து முடித்தேன்” என்று ராஜபக்சே சொன்னானே இதற்கு இவர்கள் பதில் சொன்னார்களா? பிரபாகரன் இறந்த சான்றிதழ் கேட்டு சீனா, பாகிஸ்தானில் இருந்தா போனார்கள். பிரணாப் முகர்ஜிக்கு தான் வரைபடத்தில் குச்சிய வெச்சு கிட்டு இதோ பிடித்து விட்டோம் என்று சொல்லிட்டு இருந்தான். “எங்கள் குழுவில் சிவசங்கர் மேனன், எம்.கே. நாராயணன் போன்றவர்கள் எங்களுக்கு பெரிதும் உதவினார்கள்” என்றான் கோத்தபய ராஜபக்சே. ஆக, போரை நடத்தியது இந்தியா, இந்தியா இல்லாமல் அவனுக்கு இந்த துணிவு வராது. என் கணவர் இறந்த நாளில் பிரபாகரன் உயிரை தர வேண்டும் என்பது தான் சோனியா வின் ஒப்பந்தம். 500 தமிழக மீனவர்களை சுட்டவான் சிங்களவன் இதை ஏன் இந்தியா கேட்கவில்லை. ஆக, போரை இந்தியா நடத்தவில்லை என்று சொல்வது அரசியல் பிழைப்பு வாதிகளின் பிதற்றல் தான்.

கேள்வி : ஈழத்தமிழர் பிரச்சனையில் ஜாதித் தமிழன், மதத்தமிழன், கட்சித்தமிழன் யார் ஆபத் தானவர்கள்?
ஜாதித் தமிழன் இனம் என்று சொல்லும் போது ஒடி வருகிறான். மதத் தமிழன் கூட தமிழீழம் தான் தீர்வு என்று வருகிறான். கட்சித் தமிழன் தான் இந்த இனத்தை வீழ்த்தியவன். இந்த போராட்டத்தில் ஒன்றிணைய மறுத்தவன். எல்லா உணர்வையும் அடக்கிக்கொண்டு பதவி பிழைப்புவாத அரசியலுக்காக கட்சியின் தலைமை வாய்திறக்காததால, கட்டளை இடாததால கைகட்டி, வாய்மூடி கடைசி வரை வேடிக்கை பார்த்தவன் இந்த கட்சித் தமிழன் தான். 

கேள்வி : “நாம் தமிழர்” இயக்கத்தின் குறிக்கோள், எதிர்காலத் திட்டம் என்ன?
என் மொழி, என் இனம் இதுதான்முதன்மை கொள்கை. என் மொழி சிதையக் கூடாது. அது சிதைந்தால் என் இனம் சிதைகிறது. என் இனத்திற்கு எந்த பங்கமும் வரக்கூடாது. உரிமை, உடமை பாதுகாக்கப்பட வேண்டும். உலகெங்கிலும் பரவிக் கிடக்கிற தமிழர்களின் நலன் காப்பாதிலிருந்து அத்தனைக்கும் இந்த “நாம் தமிழர்” இயக்கம் பாதுகாப்பு அரணாக இருக்கும். அதுதான் எங்களின் முதன்மை கொள்கை. என் இனத்திற்கு சிக்கல் முல்லைப் பெரியாறில் இருந்து தண்ணீர் தரமாட்டான் என்றால், அவன் தண்ணீர் தருகிற வரைக்கும் போராடும். என் இனத்திற்கு எதிராக, உரிமைக்கு எதிராக எது வந்தாலும் எதிர்த்து போராடுவோம். 

கேள்வி : இயக்கத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு எப்பொழுது?
என்றைக்கு தமிழர் இனம் வீழ்ந்தது, இனி அவ்வளவுதான் தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது என்று இந்தியத் துணை கண்டம் வளருகிற வல்லாதிக்க பேரரசு கருதியதோ, சிங்களவன் அறிவித்தானோ அந்த கறுப்பு தினத்தில் தமிழினம் வெகுண்டு எழுந்தது பார் என்பதை உலகுக்கு அறிவிக்கும் விதமாக “மே 17” அன்று மாபெரும் அரசியல் இயக்கமாக உருவாக இருக்கிறது. இதில் ஜாதி, மதம், கட்சி பிணக்கின்றி எல்லா தமிழர்களும் ஓடிவந்து உறவுக்கரம் நீட்டி “நாம் தமிழர்” பேரியக்கம் தமிழர் களுக்கான பெருங்குடும்பம் என்று மாறுவதற்காக வரவேண்டும் என்பதுதான் என்வேண்டுகோள்.

(2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுத்த பேட்டி )